அம்பாறை, மாவடிப்பள்ளி
வீதியில் மதரஸா மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் காணாமல் போன ஏனைய மாணவர்களைச் மீட்கும் பணி இன்றும் தொடர்ந்து வருகின்றது.
நேற்று சம்பவத்தை கேள்வியுற்றவுடன் கடற்படையினரை தொடர்பு கொண்டு மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இன்று காலை (27) சம்பவ இடத்துக்குச் சென்று உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டருந்தார்.
மேலும் குறித்த மீட்பு பணிகளை துரிதப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.