பொதுத்தேர்தலின்போது
எந்தவொரு வாக்குச்சாவடியிலும் முறைகேடு நடந்தாலும் அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இரத்துச் செய்யப்படும் என தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம். ஏ. எல். ரத்நாயக்க வலியுறுத்தினார்.
எனவே, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கும் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாப்பதற்கும் உறுதியளிப்பது அனைத்து குடிமக்களின் பொறுப்பாகும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பான தபால் வாக்குகளை எண்ணும் பணி இன்று 14ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப் பெட்டிகள் பெறப்பட்ட பின்னர் இரவு 7.15 மணிக்குப் பின்னர் வழக்கமான வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகும்.
தேர்தல் முடிவுகள் மீள் பரிசீலனை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின்னர் தேர்தல் முடிவுகள் மற்றும் மாவட்ட முடிவுகள் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என்பதால் உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்கவும்.
மேலும், வாக்களிப்பது குடிமகனின் உரிமை மற்றும் அதிகாரம் என்றும், உங்கள் அதிகாரத்தையும் உரிமையையும் பயன்படுத்தி, விரைவாக வாக்குச்சாவடிக்குச் சென்று உங்கள் உரிமையை பயன்படுத்த வேண்டும் என்றார்.