கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்கு

உட்பட்ட படோவிட்ட பகுதியில் இன்று (13) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

படோவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடையவர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு T56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது,

சந்தேக நபர்கள் தொடர்பான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

119 அவசர இலக்கத்துக்கு கிடைத்த தகவலின் ஊடாக இந்த சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி