பொத்துவில் அறுகம்பே பகுதியில்
விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று (13) பிற்பகல் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
அக்டோபர் 23 அன்று அமெரிக்க தூதரகத்தால் தொடர்புடைய பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அறுகம்பே பிரதேசத்தில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக வெளியான தகவலின் அடிப்படையில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பிக்கவுள்ளதாக அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.