(அஷ்ரப் ஏ சமத்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

தலைவர் ரிஷாத் பதியுதீன் அவரது ஆதரவாளர்கள் மற்றும் வாகனங்கள் மீது காதர் மஸ்தான் ஆதரவாளர்களினால் கடந்த 11ஆம் திகதி திங்கட்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டது.

இது தொடர்பில் ரிஷாத் பதியுதீன் பொலிஸில் முறைப்பாடு செய்தும் இதுவரை வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனவே, ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சியின் சட்டத்தரணி  என்ற வகையில் இவ்விடயம் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளோம்.

இந்தச் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு பொரளையில் உள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே கட்சியின் சட்டத்தரணி விஜயகுணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்

இந்தச் சம்பவத்தில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவரது ஆதரவாளர்களே  ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவங்கள் நேரடி காணொளியாக  ஊடகங்களிலும்  காண்பிக்கப்பட்டது

இந்தத் தாக்குதலில் ரிஷாத் பதியுதீனதும் ஆதரவாளர்களின் வாகனங்கள்  சேதமாக்கப்பட்டன.

அத்துடன் ரிஷாத் பதியுதீன் ஆதரவாளர்கள்  மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரிஷாத் பதியுதீன் தேர்தல் கூட்டமொன்றை முடித்துக் கொண்டு வரும் வழியில் அவரது கட்சி அலுவலகம் 100 மீட்டர் அருகிலிருந்தது அதற்கு செல்லும் வழியிலேயே காதர் மஸ்தான் ஆதரவாளர்கள் வழிமறித்து இத் தாக்குதலை மேற்கொண்டனர்.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சகல சந்தேக நபர்களையும் கைது செய்து விசாரனை செய்து உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கும்படி பதில் பொலிஸ் மா அதிபரின் கவனத்ததுக்குக் கொண்டு வருவதாக சட்டத்தரணி விஜயகுணவர்த்தன தெரிவித்தார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி