ஜனாதிபதி அநுர திஸாநாயக்க
தலைமையில் கம்பஹா மாநகர சபை மைதானத்தில் நடைபெற்ற பேரணியில் கசிப்பு போத்தல் ஒன்றை மறைத்து கொண்டு சென்றிருந்த நபரை ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மினுவாங்கொட பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இந்த நபர் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளாவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகளினால் கசிப்பு போத்தலுடன் கம்பஹா பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.