கொக்கேயின் போதைப்பொருளை
சிறு சிறு பொதியில் இட்டு அவற்றை விழுங்கிய நிலையில் இலங்கை வந்த சியராலியோலியன் பிரஜை ஒருவர் நேற்று (12) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
விமான நிலைய வருகை முனையமான கிரீன் செனல் வழியாக விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்டபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 32 வயதான நபராவார்.
துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து துருக்கி எயார்லைன்ஸ் விமானத்தில் நேற்று அதிகாலை 5.49 மணியளவில் இந்தப் பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இந்த பயணி மீது சந்தேகமடைந்த சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள், அவரை ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தியபோது, அவர் கொக்கேயின் போதை்பொருளை விழுங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
இதன்படி, கைது செய்யப்பட்ட பயணியை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்னர் இவரை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு வைத்தியர்களால் அவரது வயிற்றிலிருந்து 80 கொக்கேயின் போதை மாத்திரைகள் வெளியே எடுக்கப்பட்டன.