இராஜகிரிய,வெலிக்கடை வீதியில்
அமைந்துள்ள தற்காலிக ஆடைத் தொழிற்சாலை கட்டிடத்தில் இன்று (12) தீ பரவல் ஏற்பட்டது.
இதனையடுத்து தீயை கட்டுக்குள் கொண்டுவர கோட்டே தீயணைப்புத் திணைக்களத்தின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
தீயினால் ஏற்பட்ட சேத விபரத்தை மதிப்பிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.