மருத்துவர் ஒருவரை நிர்வாணப்படுத்தி,
புகைப்படம் எடுத்து மிரட்டி சுமார் ஒரு இலட்சம் ரூபாவை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு மாவட்டத்தில் மக்கள் போராட்ட அமைப்பு சார்பில் போட்டியிடுவதாக பம்பலப்பிட்டி பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
மற்றைய சந்தேக நபர்களில் அவரது மருமகன் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகியோர் அடங்குவர்.