மொடல் அழகி பியுமி ஹன்சமாலி
மற்றும் அவுரா லங்கா நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தம்புகல ஆகியோருக்கு எதிராக விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களத்துக்கு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (11) மீள அழைக்கப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதிவான் பண்டார இளங்கசிங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அதிகளவான வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை வைத்திருப்பதாகக் கூறப்படும் அவுரா லங்கா நிறுவனத்தின் தலைவர் விராஜ் தபுகல மற்றும் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான ரூபாவை சம்பாதித்ததாகக் கூறப்படும் மொடல் அழகி பியூமி ஹன்சமாலி கோம்ஸ் ஆகியோரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.