முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ

சேமசிங்கவுக்கு சொந்தமான குறித்த V8 ரக வாகனம் இன்று (11) மாலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகனத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் பொறுப்பில் எடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
 
விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான வழக்காக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவுக்கு சொந்தமான வாகனம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வசம் இருப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 
சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட டொயோட்டா V8 சொகுசு ஜீப் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வலான ஊழல் தடுப்பு பிரிவினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் வீட்டை கடந்த நவம்பர் மாதம் 2ஆம் திகதி சோதனையிட்டபோதும், சந்தேகத்துக்குரிய வாகனம் அங்கு காணப்படவில்லை.
 
பின்னர் சுஜீவ சேனசிங்கவுக்கு சொந்தமான கொள்ளுப்பிட்டியில் உள்ள வீடொன்றில் குறித்த சொகுசு ஜீப் நிறுத்தப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்டனர்.
 
அங்கு கண்டெடுக்கப்பட்ட ஜீப்பை அரசாங்க இரசாயன ஆய்வாளரிடம் ஒப்படைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோட்டை நீதிவான. தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.
 
அந்த உத்தரவின்படி, குறித்த வாகனம் சுஜீவ சேனசிங்கவினால் அரசாங்க பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
அதன் பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொது முறைப்பாடுகள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணை அறிக்கையின் ஊடாக விசாரணைகளின் முன்னேற்றத்தை கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று அறிவித்தனர்.
 
குறித்த ஜீப் 2010ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவுக்கு வழங்கப்பட்ட வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்துடன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.
 
அதன்படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா இந்த ஜீப்பை பதிவு செய்யாமல் பல மாதங்களாகப் பயன்படுத்தி வந்த நிலையில், 2011ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி மதவாச்சி செட்டிகுளம் பகுதியில்  இத்த ஜீப்சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். 
 
குறித்த சொகுசு ஜீப் 2022 ஆம் ஆண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் பெயரில் பதிவு செய்யப்பட்டது. பின்னர், குறித்த ஜீப் வாகனம் ஒன்று சேர்ப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
எனவே, ஒருவரின் உயிரிழப்பை ஏற்படுத்திய காரை சட்டவிரோதமாக பாவித்தமை  குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் ஏனென்றால், இது நாட்டில் நிலுவையில் உள்ள வழக்கின் சான்றுப் பொருள் இந்த ஜீப். 
 
எனவே, இந்தச் சந்தேகத்துக்குரிய இந்த விவகாரத்த விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டது.
 
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி, குறித்த சொகுசு ஜீப்பை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு எடுத்துச் சென்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி