ரணில் விக்கிரமசிங்கவும் காஞ்சன
விஜேசேகரவும் செய்து கொண்ட உடன்படிக்கை காரணமாக எரிபொருளின் விலையை உடனடியாக குறைக்க முடியாது போனதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் எண்ணெய் வரிசைகள் ஏற்படும் என கூறியவர்கள் இன்று எண்ணெய் விலை குறைக்கப்பட்ட தொகை போதாது என குற்றம் சுமத்துவதாகவும் அவர் கூறினார்.
தேசிய மக்கள் சக்தியின் மஹியங்கனை பொதுத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.