பெரும்பான்மை பலத்துடன் கூடிய
பாராளுமன்றம் அமைப்பது தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம் காரணமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி குழு தலைவர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், திசைகாட்டியின் கட்டுப்பாடு மீதான மக்களின் நம்பிக்கை படிப்படியாக உடைந்து வருகிறது.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இன்று நாட்டில் அரசியல் நிலைமை மிகவும் நிச்சயமற்றதாக உள்ளது. ஆறு வாரகால அரசாங்கத்தின் மீது மக்களின் நம்பிக்கை படிப்படியாக உடைந்து வருகிறது. அதாவது எதிர்வரும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தை எவராலும் கைப்பற்ற முடியாது.
எதிர்காலத்தில் சமநிலையான பாராளுமன்றம் பிறக்கும். அது எல்பிட்டிய தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்தது. ஒருவருக்கு மூன்றில் இரண்டு பங்கு அல்லது அதற்கு மேல் அதிகாரம் கிடைத்தால், அது மிகவும் ஆபத்தான நிலை. சர்வாதிகார ஆட்சிக்கு கூட செல்லலாம் என்றார்.