சுன்னாகம் பொலிஸை சேர்ந்த
நால்வர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
உப பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களே பணி இடைநிறுத்தத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுன்னாகம் பொலிஸார் விபத்து ஒன்று இடம்பெற்ற பகுதிக்கு சென்று அங்கிருந்த பெண்கள் உட்பட பலர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
இவ்வாறான பின்னணியிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.