பொதுத் தேர்தலை முன்னிட்டு
எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்தல் நவம்பர் 14ஆம் திகதியும் வாக்கு எண்ணிக்கை 15ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
இதனை மீறுவோர் மீது சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு கலால் ஆணையாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளது.