(எஸ்.எம்.அறூஸ்)
புதிய ஜனநாயக முன்னணியின்
சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரபின் வெற்றிக்காக ஒலுவில் பிரதேசத்தில் இளைஞர் ஒன்றுகூடல் இடம்பெற்றது.
போரஸ்ட் கல்வி அகடமியின் தவிசாளர் எம்.எல்.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற இளைஞர் ஒன்றுகூடலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முசாரப் கலந்து கொண்டார்.
எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சட்டத்தரணி முசாரபை ஏகமனதாக ஆதரித்து வாக்களிக்கவுள்ளதாக இங்கு கலந்து கொண்ட சகல இளைஞர்களும் தீர்மானித்தனர்.

இங்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உரையை நிகழ்த்தியதுடன் போரஸ்ட் கல்வி நிறுவனம் இப்பிரதேசத்தில் ஆற்றிவரும் கல்விப்பணியைப் பாராட்டிப் பேசியதுடன் இக்கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக எதிர்காலத்தில் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாகவும் குறிப்பிட்டார்.
ஒலுவில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மீராலெப்பையின் புதல்வர்களினாலேயே போரஸ்ட் கல்வி அகடமி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எல்.எம்.பாரீஸ், பாராளுமன்ற உறுப்பினரின் ஒலுவில் பிரதேச இணைப்பாளர் எம்.ஜே.எம்.அஸ்ஹர், அட்டாளைச்சேனை பிரதேச இணைப்பாளர் எஸ்.எம்.அறூஸ், மத்திய குழு செயலாளர் எம்.எல்.எம்.சாதீக், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல்.எம்.பயாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.