பொதுத் தேர்தலுக்கான பிரசாரம்
இன்று (11) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் நாளை (12) தேர்தல் பிரசார அலுவலகங்களும் அகற்றப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அமைதி காலம் ஆரம்பித்ததன் பின்னர் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும், வீடு வீடாக சென்று வாக்குகளை கோருவதும் பேரணிகளை நடத்துவதும் சட்டவிரோதமானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 14-ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் தயாராகிவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.