அம்பலாங்கொடை பிரதேசத்தின்
ஊரவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீதே துப்பாக்கிப் பிரயோகம மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மற்றொரு மோட்டார் சைக்கிளில் இருவரையும் பின்தொடர்ந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரும் அம்பலாங்கொடை, குளிகொட பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான தம்பதி என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இருவரும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.