எதிர்வரும் காலங்களில் மின்சாரக்
கட்டணத்தை 30 வீதத்துக்கு மேல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் நேற்று (09) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“ஒன்றிலிருந்து ஒன்றரை வருட காலத்திற்குள் மின்சாரத் துறையில் பாரிய மாற்றத்தை உருவாக்குவோம். மின் கட்டணத்தை 30%க்கு மேல் குறைப்போம். அதற்கு எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் தாருங்கள். எரிபொருள் விலையை குறைப்பதற்கும் கால அவகாசம் தேவை. இவற்றை நாங்கள் செய்வோம்,'' என்றார்.