ஓட்டமாவடி மியாங்குளம் - கொழும்பு
வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி அக்கர் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் பாறுக் என்பர் தான் முகாமையாளராக பணிபுரியும் ரிதிதென்ன எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச செல்லும்போதே விபத்துக்குள்ளாகி மரணமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த குறித்த நபர் மீது எதிரே வந்த சிறிய லொறி மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

