பாரியளவிலான போதைப்பொருள்
கடத்தல்காரரான பேலியகொட அமில என்பவருக்கு சொந்தமானது என கூறப்படும் சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 மற்றும் 31) வந்துடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுகேகொட, கங்கொடவில நீதிமன்றுக்கு அருகில் உள்ள கம்சபா சந்தியில் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
வீதியில் முச்சக்கர வண்டியொன்றை நிறுத்தி சோதனையிட்ட போது, 52 கிராம் 340 மில்லிகிராம் போதைப்பொருள் ஐஸ் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
பின்னர், முச்சக்கர வண்டி மற்றும் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, இந்த இரண்டு சந்தேக நபர்களும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான பேலியகொட அமில என்பவருக்குச் சொந்தமான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மிரிஹான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.