தாம் எழுப்பும் உண்மையான
பொருளாதார பிரச்சினைகளை அரசியல் சேறு பூசி மறைக்க முயற்சிக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நவம்பர் 14க்கு பின்னர் எங்களது போராட்டம் தொடங்கும் என்றும் அவர் கூறுகிறார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி நேற்று (9) இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
தாம் எழுப்பிய உண்மையான பொருளாதார பிரச்சினைகளை அரசியல் சேறு பூசி மூடி மறைக்க முயல வேண்டாம் என கூறிய ரணில் விக்கிரமசிங்க, நாட்டுக்கு எதிர்காலம் வேண்டுமானால் எரிவாயு சிலிண்டருக்கு வாக்களித்து அனுபவமிக்க அணியை பாராளுமன்றத்துக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.
அந்த உரையில் மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி...
நவம்பர் 14ஆம் திகதிக்கு பின்னர் எமது போராட்டம் ஆரம்பமாகும். நான் கேட்கும் உண்மையான பொருளாதார பிரச்சினைகளை அரசியல் அவதூறுகளை பயன்படுத்தி மூடி மறைக்க முயற்சிக்காதீர்கள்.
பாராளுமன்றம் திருடர்களின் கூடாரம் என்று இவர்கள் இப்போது கூறுகிறார்கள் . பாராளுமன்றத்தை சுத்தப்படுத்துவோம் என்பதே அவர்களின் பொதுத் தேர்தலின் கருப்பொருள்.
எந்தவொரு பாராளுமன்றத்திலும் குறைபாடுகள் மற்றும் பலவீனங்கள் உள்ளன. ஆனால் 1931 ஆம் ஆண்டு முதல் ஆசியாவின் ஜனநாயக அமைப்பில் செயற்பட்ட ஒரேயொரு பாராளுமன்றம் இலங்கைப் பாராளுமன்றமாகும்.
எங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் உள்ளது. ஜனாதிபதி மாத்திரமே பாராளுமன்றத்தை திருடர்களின் கூடாரம் என்கிறார் என்றும் ரணில் தெரிவித்தார்.