மின் கட்டண திருத்தத்தை அமுல்படுத்த
சுமார் 6 வாரங்கள் ஆகும் என மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிர்ணயிக்கப்பட்ட முறையின்படி மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்கு இந்தக் காலம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின் கட்டண திருத்தம் குறித்த பிரேரணை நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு அமைய இல்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எழுத்து மூலம் அறிவித்துள்ளது
அதற்காக ஒரு வார கால அவகாசம் வழங்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சபை கோரியுள்ளது.
புதிய பிரேரணையை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்க கால அவகாசம் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.