முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
சுஜீவ சேனசிங்க பயன்படுத்திய ஜீப் தொடர்பான மேலதிக விசாரணைக்காக அதனை அரசாங்க இரசாயனப் பரிசோதகரிடம் ஒப்படைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஜீப்பின் பெறுமதி சுமார் 100 மில்லியன் ரூபாவா என்பதால், சம்பந்தப்பட்ட காரை அவரது சாரதி ஒருவர் ஊடாகப் பொலிஸ் பாதுகாப்பில் அரசாங்க இரசாயன பரிசோதகரிடம் எடுத்துச் செல்லுமாறு சுஜீவ சேனசிங்கவின் சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் அனுமதித்தது.