பதிவு செய்யப்படாத யானைகளை
தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகளை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு தொடர்பில், இயற்கை மற்றும் கலாசார கற்கைகளுக்கான நிலையம் உள்ளிட்ட குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட பிரேரணையை மீளாய்வு செய்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதியரசர்களான பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, பதிவு செய்யப்படாத யானைகள் தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் பாதுகாப்பில் உள்ள யானைகளை விடுவிப்பதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதாக வாதிட்டார்.