இரண்டு வருடங்களில் முன்னாள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை மக்கள் விரட்டியடித்ததாகவும், அனுபவமற்ற இந்த அரசாங்கம் அதனைவிட விரைவாக விரட்டியடிக்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
அனுபவமுள்ள அணியே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய சிறந்த குழு தமது கட்சியில் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
பொதுத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.