கொழும்பு நோக்கி சென்று
கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளானபோது குறித்த பஸ்ஸில் 15 பேர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மடகல்ல - மஹவ வீதியில் கொன்வெவ பிரதேசத்திலேயே இன்று (08) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
குறித்த பஸ் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.