ராகம பிரதேசத்தில் உள்ள ஆரம்ப
பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் 150,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகம, மத்துமகல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புலனாய்வுப் பிரிவினர் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
முறைப்பாட்டாளரின் பிள்ளையை 2025-ம் ஆண்டு முதலாம் வகுப்பில் சேர்ப்பதற்கு இலஞ்சமாக இந்தப் பணத்தை அதிபர் கேட்டுள்ளார்.
இதற்கான தொகை நேற்று (07) பாடசாலை அலுவலகத்தில் வழங்கப்பட்டபோதே அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.