சர்வதேச நாணய நிதியம் தொடர்பில்
ஜனாதிபதிக்கு புரியவில்லை என்றால் தாத்தாவிடம் கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மிக முக்கியமான அம்சம் பொருளாதாரம். IMF உடன் எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது. அதனை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பதை ஜனாதிபதி இப்போது தீர்மானிக்க வேண்டும். அல்லது முற்றிலுமாக ஒழிக்கப்படுமா என்பதை அவரே கூற வேண்டும். அவர்கள் IMF பற்றி இரண்டு முறை விவாதித்தனர்.
மூன்றாவது தவணையை நவம்பர் மாதத்துக்குள் பெற்றுக் கொள்ளலாம்.
இப்போது மூன்றாவது தவணை நவம்பர் மாதம் பெறுவது தொடர்பில் விவாதிக்கப்படுகிறது. நீங்கள் ஒப்புக்கொண்டால், அடுத்த ஆண்டு அதைப் பெறலாம்.
அல்லது இந்த வருட இறுதியில். நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? எனவே, நாட்டின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார்.