போலி இலக்கத்தகடு கொண்ட
வைத்திருந்தமை மற்றும் பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கங்கொடவில நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இந்த விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த காரின் செஸி இலக்கம் கூட போலியானது என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் சட்டப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர அங்கு தெரிவித்தார்.
சந்தேக நபர் 2020 ஆம் ஆண்டு முதல் போலி இலக்கத் தகடுகளுடன் காரைப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதைக் காட்டும் காணொளி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் சட்டப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்தார்.