சில அதிகாரிகள் உயர் பதவிகளைப் பெறுவதற்காக தன்னைப் பலிக்கடா ஆக்கினர். இது போன்ற அநீதி மற்றவர்களுக்கு ஏற்படாத வகையில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் குருணாகல் போதனா வைத்தியசாலையின் டொக்டர் ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபி தெரிவித்துள்ளார் .
குருணாகல் நீதிவான் நீதிமன்றம் நேற்று (06) அவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து விடுதலை செய்து அவருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யவும் உத்தரவிட்டிருந்த்து.
இதன் பின்னர் டாக்டர் ஷாபி ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
சிலரின் சொந்த நலன் காரணமாக பொய்க் குற்றச்சாட்டின் பேரில், நானும் என் மனைவியும் தனது குடும்பமும் ஐந்து வருடங்களும் ஆறு மாதங்களும் அனுபவித்த துன்பங்கள் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளன .
இது எனக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல , இலங்கையில் நீதிக்காக போராடியவர்களுக்கும் அதற்காக நின்றவர்களுக்கும் கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன் , என்றார்