மாவட்ட மட்டத்தில் ஜனாதிபதிகளுக்காக
நிர்மாணிக்கப்பட்டுள்ள மற்றும் நிர்மாணிக்கப்படும் ஜனாதிபதி மாளிகைகள் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட மாவட்ட மட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகைகள் தொடர்பில் அவதானித்து வருவதாகவும் அவற்றை வேறு தேவைகளுக்கு பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் தாமதமாவதற்கு காரணமான விடயங்கள் தொடர்பிலும் அமைச்சர் விஜித ஹேரத் விளக்கமளித்தார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.