பிரபல அரிசி முதலாளி டட்லி சிறிசேன
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தற்போதைய ஜனாதிபதி அநுர திஸாநாயக்கவுக்கு பத்து கோடி ரூபாவை வழங்கியதாக மக்கள் போராட்டக் கூட்டணி தெரிவித்துள்ளது.
அதற்கான தொலைபேசி உரையாடல் தன்னிடம் இருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் இந்திரானந்த டி சில்வா கூறுகிறார்.
ஜனாதிபதிகளை நியமிக்க டட்லி சிறிசேன பணத்தை வீசுவதாக கூறிய அவர், ஜனாதிபதி தேர்தலின்போது சஜித் பிரேமதாசவுக்கு 50 கோடி ரூபாவை ரத்ன அரிசி அதிபர் வழங்கியதாகவும் தெரிவித்தார்.
மக்கள் போராட்டக் கூட்டணியின் ஏற்பாட்டில் கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவர் தெரிவித்துள்ளார்
.