ஐக்கிய மக்கள் சக்தியின் சிலாபம்
விலட்டாவ பிரதேசத்திலுள்ள கட்சி அலுவலகம் ஒன்று நேற்று முன்தினம் (05) சிலரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தின் அமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் அங்கு வந்து அங்கிருந்த இருவரைத் தாக்கி, வெளியாட்கள் தங்கள் கிராமத்தில் அலுவலகம் கட்ட இடமில்லை என தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் தனது கையில் வாள் மற்றும் தடி வைத்திருந்ததுடன் சிலாபம் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் கோகுலநாத் சிங்கின் பெனரையும் கிழித்து எறிந்தார்.
இந்த நபர் ஒரு கொலை தொடர்பில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டவராவார.
இச்சம்பவத்தின் பின்னர் தாக்குதல் நடத்தப்பட்டு அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சிலாபம் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் ந வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் சிலாபம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தம்மிக்க ஹபுகொடவிடம் கேட்டபோது, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
,