கடந்த ஜனாதிபதித் தேர்தல்
காலத்தில் சமூக வலைதளங்களில் பொய்யான செய்தி வெளியிடப்பட்டமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அநுர திஸாநாயக்கவின் சுகவீனம் குறித்து இணையத்தில் பொய்யான தகவல்களை வெளியிட்டமை தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இந்த விசாரணைகள் நடத்தப்படுகின்றன.