முஸ்லிம் பெண் ஒருவரைக் கொலை
செய்து பணம், நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (05) கண்டி உடுதெனியவில் இடம் பெற்றுள்ளது.
சித்தி ஆபிதா (70) என்ற 5 பிள்ளைகளின் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த இரு இனந்தெரியாத நபர்கள் இந்தப் பெண்ணை கட்டிவைத்து சப்தமிடாதவாறு மூச்சுத்திணறச் செய்த பின்னரே இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனரென தெரிய வருகிறது.
இந்த வீட்டிலிருந்து பெறுமதியான தங்க நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளன.
சம்வம் இடம்பெற்றபோது மரணித்தவரின் கணவர் மட்டுமே வீட்டில் இருந்தாரென்றும் இவர் எழும்ப முடியாத பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவரென்றும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் கிராமத்தில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலாத்துஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்