ஒவ்வொரு விலை திருத்தத்தின்
போதும் எரிபொருளின் விலையை குறைக்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த விலை திருத்தத்தில் உலக சந்தையின் விலை சூத்திரத்துக்கு ஏற்ப இரண்டு வகையான எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் முதல் விலைத் திருத்தத்தில் அனைத்து எரிபொருள் விலைகளும் குறைக்கப்பட்டு மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்பட்டதாகவும் அதை சிலர் மறந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
எவ்வாறாயினும் எதிர்காலத்தில் பொருளாதாரம் வலுவடைவதன் மூலம் மக்களுக்கு மேலும் சலுகைகளை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.