வைத்தியர் ஷியாப்தீன் மொஹமட்
ஷாபிக்கு எதிராக குருணாகல் நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நீதிவான் இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
போதிய ஆதாரம் இல்லாமை காரணமாக வழக்கை தொடர முடியாதுள்ளதால் அதனை தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி வைத்தியர் ஷாபி அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.