சமூக வலைதளங்கள் ஊடாக ஆண்
ஒருவரை தொடர்பு கொண்டு அவரது நிர்வாண புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக கூறி பலாத்காரமாக பணம் பெற்ற சந்தேக நபரை கணினி குற்ற புலனாய்வு பிரிவு வடமேற்கு மாகாண அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்கள் ஊடாக உரையாடல்களை ஏற்படுத்தி நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக கூறி குறித்த சந்தேக நபர் 7 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர் நேற்று (05) வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள கவுன்சில் அவென்யூவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் துல்ஹிரியாவில் வசிக்கும் 20 வயதுடையவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு வடமேற்கு மாகாணப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்