தெஹிவளை, கவுடானை பிரதேசத்தில்
அத்திடிய கால்வாய் ஊடாக செல்லும் நீரில் ஒருவித இரசாயனம் கலந்த சிவப்பு நிற நீர் காணப்பட்டதாக அத்திடிய பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலை நேற்று (05) பிற்பகல் வரை நீடித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸ், சுற்றாடல் பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு சென்ற மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகளால் நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இந்தக் கழிவு நீர் கடல் நீருடன் சேர்வதால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.