கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு
முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய கட்சி உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் இணைவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வருபவர்கள் கட்சிக்குள் அன்புடன் வரவேற்கப்படுவார்கள் என ராஜாங்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாமல் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், சில முக்கியஸ்தர்களின் செயற்பாடுகளினால் சிலர் கட்சியில் இருந்து ஒதுங்கியதாகவும் சிலர் சலுகைகளுக்காக கட்சியில் இருந்து விலகியதாகவும் தெரிவித்தார்.
“கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வுகளைப் பார்க்கும்போது, மக்கள் வெறுப்பு மற்றும் சில விடயங்கள் காரணமாகவும் எம்மிடமிருந்து விலகியிருந்தனர்.
இவ்வாறு விலகியவர்கள் மீண்டும் எம்முடன் இணைந்துள்ளனர். கட்சிக்குள் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம் என்றார்.