அரசாங்க ஊழியர்களுக்கு
வழங்குவதற்கு இணங்கிய சம்பள அதிகரிப்பை விடவும் அல்லது அதற்கும் அதிகமான சம்பளத்தை தமது அரசாங்கம் வழங்கும் என அனுரகுமார தெரிவித்திரந்தார். இது தொடர்பான இன்றைய நிலைப்பாட்டை ஜனாதிபதி உடனடியாக நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
“இன்று கனமழை பெய்யும் போது ஏன் இந்தக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். ஏன் கூடாரங்களின் கீழ் கூட்டங்களை நடத்துகிறோம் என ஜனாதிபதி அநுர திஸாநாயக்க கேட்டிருந்தார்.
இம்முறை கூட்டங்கள் இருந்தால் அவை மண்டபத்திலோ அல்லது கூடாரத்திலோ நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளேன். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பருவமழை இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். தெரியாமல் எப்படி ஆட்சி அமைக்க முடியும்?
இரண்டு வருடங்களில் இலங்கையில் இதுவரை இல்லாத ஒரு சூழ்நிலையில் நான் அரசாங்கத்தை அமைத்தேன்
இரண்டு ஆண்டுகளுக்குள், வங்குரோத்து நிலையை அகற்றவும் வரிசைகளின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் முடிந்தது என்றும் தெரிவித்தார்.