பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின்
சாவுமணியை ஒலிக்க பாரிய தாக்குதலை தேசிய மக்கள் சக்தி கட்டவிழ்த்து விட்டதாக பொதுத் தேர்தல் வேட்பாளர் கெஷால் ஜயசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
'காஸ் சிலிண்டரில்' கொழும்புக்கு போட்டியிடும் வேட்பாளரான கெஷால் கொழும்பு வடக்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், ஆளும் கட்சி தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராகச் செல்கிறது.
வேட்பாளருக்கும் வாக்காளருக்கும் இடையில் ஒரு நல்லுறவை ஏற்படுத்துவதற்கு பதிலாக கேள்விகள் எழுப்பப்பட்டு பதில்களை வழங்குவதற்கு பதிலாக, ஜே.வி.பி தலைமையிலான என்.பி.பி வேட்பாளர்கள் மக்களுக்கு உரையாற்றுவதற்கான அனைத்து இடங்களையும் தடுக்கிறது, என்று அவர் குற்றம் சாட்டினார்.
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்பதற்காக பெற்ற பெரும்பான்மையான வாக்குகள் ஜே.வி.பியின் வாக்குத்தளத்தில் இருந்து பெறப்பட்டவை அல்ல என குறிப்பிட்ட அவர், கட்சியின் பொதுச் செயலாளரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பாராளுமன்றத்தை உருவாக்க முயற்சிப்பதாக அவர் கூறினார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்கு அவர்களின் பகுதிகளில் பரிச்சயம் இல்லை என்றும் அவர்களுக்கே வாக்காளர்களைப் பற்றிய புரிதல் இல்லை என்றும் அவர் கூறினார்.
இப்போது செய்யப்படுவது பிரதிநிதித்துவ ஜனநாயக நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒரு கட்சிக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குவதே என்றார்.