கொழும்பு – ஜாவத்தை சந்தியில்
உள்ள இரு வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்டது.
இதனால் 3 அறைகள் முற்றிலும் எரிந்து நாசமானதுடன் பக்கத்து வீடுகளுக்கும் தீ பரவியதால் அந்த வீடுகளும் பலத்த சேதமடைந்தன
சம்பவம் இடம்பெற்றபோது விடுதி உணவகம் ஒன்றில் 12 பணியாளர்கள் இருந்ததாகவும் இருப்பினும் தீயினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், விடுதி முற்றிலும் சேதமடைந்தது. விடுதியில் ஏற்பட்ட தீ பரவலே ஏனையவற்றுக்கும் பரவியமை தெரிய வந்துள்ளது.
இதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டதுடன் குருந்துவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.