திருகோணமலை நகரில் அமைந்துள்ள
தனியார் வைத்தியசாலை ஒன்றில் இன்று (05) காலை பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 63 வயதான பெண்ணாவார்.
இவரது கணவர் குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறித்த பெண் வைத்தியசாலையின் 3ஈவது மாடியிலுள்ள தங்கும் விடுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது அவரை உயிரிழந்த பெண்ணின் கணவனின் சகோதரனே கொலை செய்துள்ளமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையுடன் தொடர்புடைய 55 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரும் அதே மாடியில் உள்ள அறையில் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.