சுமார் 3 மில்லியன் ரூபா வெற்
வரியை செலுத்தாமை தொடர்பில் ஜனக ரத்நாயக்க மற்றும் அவரது மனைவி ஆகியோரை எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் பண்டார இளங்கசிங்க நேற்று (04) அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
கிருலப்பனையில் உள்ள கணினி சேவை வழங்குநர் சார்பாக வரி செலுத்தத் தவறியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2016, 2017, 2018 ஆகிய மூன்று வருடங்களில் 31,846,248.24 ரூபா வரி நிலுவைத் தொகையையும், 1,851,658.37 ரூபா வருமான வரி நிலுவையையும் அரசாங்கத்துக்கு செலுத்தத் தவறியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஜானக ரத்நாயக்க மற்றும் அவரது மனைவி குமாரி யசோதா சில்வா ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும், அவர்கள் அப்போது வரவில்லை, அதற்கு பதிலாக நிறுவனத்தின் இயக்குனர் ஒருவர் ஆஜரானார்.
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தினேஷ் பெரேரா, இச்சம்பவத்தின் பிரதிவாதிகளான திரு.ஜானக ரத்நாயக்க மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு இம்முறை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்புமாறு நீதிமன்றில் கோரினார்.
இதன்படி, குறித்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான், இருவரையும் இம்முறை