முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
தயாசிறி ஜயசேகரவின் வட்ஸ்அப் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற
தனது வாட்ஸ்அப் கணக்கு கடந்த 3 ஆம் திகதி இரவு முதல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த ஹேக்கர்கள் தமது நெருங்கிய நண்பர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவை வைப்பிலிடுமாறு கேட்டுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
மக்கள் வங்கியின் இங்கிரிய கிளையின் சுரேஷ் குமார என்ற நபரின் கணக்கில் பணத்தை வைப்பிலிடுமாறு தனது நண்பர்களுக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பணம் கேட்டு எவருக்கும் செய்தி அனுப்பவில்லை என்றும், அந்தக் கணக்கில் பணம் போட வேண்டாம் என்றும் தயாசிறி கேட்டுக் கொண்டார்.
கடந்த அக்டோபர் 28ஆம் திகதி, முஜிபுர் ரஹ்மானும் தனது வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு செய்திருந்தார்.