மொனராகலை மாவட்டத்தில்.
பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சட்டத்தரணி இந்திக்க விஜயபண்டார மற்றும் அவரது சாரதி ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளாகி மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிளகாய் பொடி மற்றும் தடியால் இருவரும் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பகல்ல பூசல்லகந்த பிரதேசத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கியவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்