(அபு அலா)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
எஸ்.எம்.எம்.முஷாரப்பின் தேர்தல் பிரசாரத்துக்கு
பொத்துவிலில் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றபோது அப்பிரதேச மக்களினால் அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானசாலைக்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொடுத்து பணம் பெற்றமை, பொத்துவில் பெரிய பள்ளிவாயலில் பொய் சத்தியம் செய்தமை, குழந்தையின் உடல் எரிப்புக்கு ஆதரவு கொடுத்தமை, முக்கியமான விடயங்களுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்காமல் ஏமாற்றியமை போன்ற செயற்பாடுகளை முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் செய்தார் என்றும் அவரின் இந்த செயற்பாடுகளை ஒருபோதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.