தெஹிவளையில் உள்ள
இஸ்ரேலிய துணைத் தூதரகத்தை சூழவுள்ள பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (23) மாலை கைது செய்யப்பட்ட 21 வயதுடைய சந்தேக நபர் மாவனல்லை கிரிந்ததெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர் .
அவர் எதற்காக அந்தப் பகுதியில் காணப்பட்டார் என்பதை உரிய முறையில் தெரிவிக்கத் தவறியதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்